நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி!
காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அது முற்றிலும் உண்மை. இந்நூலின் ஆசிரியர் ஹால் எல்ராடின் வாழ்க்கையே அதற்கு சாட்சி.
சாவின் விளிம்புவரை அவரை அழைத்துச் சென்ற ஒரு கோர விபத்து அவருடைய உடலையும் மூளையையும் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மனத்தளவிலும் அவரைப் படுகுழியில் தள்ளியது. இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் அதே உத்திகளைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய மோசமான நிலையிலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள் சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நூலாசிரியராகவும், ஓர் ஆலோசனையாளராகவும், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்துள்ளார். அந்த உத்திகளை இவ்வுலகிலுள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதற்காகவே அவர் இந்நூலை எழுதியுள்ளார்.
No product review yet. Be the first to review this product.