எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்து கொள்கிற அவசரத்தில், பழக்கமற்ற தரையோரங்களில், சரசரத்து ஓடி, முட்டிமுட்டிப் புடைதேடுகிற நிஜம் அது. இந்தவிதத் தவிப்பிற்கும் விருப்பத்திற்கும் இடையில்தான் உறவும் வாழ்வும் தொடர்ந்து என்மீது கவிகிறது அல்லது நான் உறவின் மீதும் வாழ்வின் மீதும் கவிகிறேன். இந்த விதமான வாழ்வும் உறவும் ஊடாடுகிற மனநிலையில் எழுதப் பட்டவையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள்.
- வண்ணதாசன்
No product review yet. Be the first to review this product.