தீப்பற்றிய பாதங்கள் : தலித் இயக்கம் - பண்பாட்டு நினைவு - அரசியல் வன்முறை
டி .ஆர். நாகராஜ்
தமிழில் : சீனிவாச ராமாநுஜம்
முழுமையாகத் திருத்தப்பட்ட பதிப்பு
தீப்பற்றிய பாதங்கள் நூலின் இப்புதிய பதிப்பு முழுமையாக திருத்தப்பட்ட பதிப்பு. உலகெங்கிலும் பல நூல்கள் அடுத்த பதிப்பை காணும் போது முதல்பதிப்பில் இருக்கும் குறைகளை களைந்து வெளியிடுவது இயல்பானதே. ஆனால் இந்நூலினை மொழிபெயர்த்துள்ள ராமாநுஜம் அதன் திருத்தங்களை வெறும் வார்த்தைகளையோடு நிறுத்திவிடாமல் மூல ஆசிரியரின் தொனிக்கு நெருங்கிச்செல்ல முயன்றுள்ளார். மொழியாக்கமும் வாசகரும் இணைந்து ஒரு தொனியை உருவாக்கவேண்டும் என்கிறார்.
இப்படியாக இணைந்து ஒரு தொனியை உருவாக்குவதன் ஊடாகவே ஒரு மொழியாக்கம் அதனளவில் தனித்து நிற்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது. இங்கு மூலப் பிரதியின் நோக்கம், மொழியாக்கத்தின் நோக்கம், வாசகரின் நோக்கம் எல்லாம் ஒன்றிணைந்து பலவிதமான தொனிகளை உருவாக்குகின்றன.
பொருள் குறித்த தேடலுக்குள் சிக்கிக்கொள்ளும் மொழிபெயர்புகளுள் ராமாநுஜத்தின் மொழிபெயர்ப்பு தனித்துவமானது. இதன் பொருட்டே அவர் மொழியைப் பயன்படுத்துவது ஒரு மானுடச் செயல்பாடு என்று வரையறுக்கிறார். அது பானை செய்வதுபோல், அறிவியல் செய்வதுபோல் மொழியை பயன்படுத்துவதும் ஒரு மானுடச் செயல்பாடு என்கிறார்.
No product review yet. Be the first to review this product.