இத்தொகுப்பில் சோடை போன ஒரு கதையும் இல்லை. நான்கு கதைகளை இவை தமிழ்க்கதைகள் என்று உலகுக்குத் தரலாம். மலையும், காடும், காட்டுயிர்களும் பவாசெல்லதுரையின் கதைகளில் அல்லாமல் வேறு எவராலும் இந்த அளவுக்கும் அகலத்துக்கும் துல்லியமாகத் தொட்டுக்காட்டப்பட்டதில்லை. இவர் கதைகள் தமிழ்க் கதைகளின் புலத்தை விரிவாக்கி இருக்கின்றன. மிகுந்த சொற்செட்டு, வர்ணணைகளில் துல்லியம், அசாதாரண நம்பகத்தன்மை, அருமையான மொழி இவையே பவாவின் கதைகள் என எழுத்தாளர் பிரபஞ்சனும்
அனுபவங்களின் சாரம் ஏறிய முதிர்ந்த மொழிநடை. பல ஒற்றை வரிகளில் வாழ்வின் தரிசனமும் கவித்துவமும் பொங்கி வழிகின்றன. வாசிக்கும் போதுதான் அதை உணர்ந்து அனுபவிக்க முடியும். தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் இது ஒரு முக்கியப் பதிவு. புதிய கொடை. பவாசெல்லதுரை என்ற கலைஞனுக்கு கலை கைவரப் பெற்றுள்ளது. வாசித்து முடித்தவுடன் அழுகையும் கோபமும் கண்ணீரும் ஆனந்தமும் நம்மை ஒரு பைத்தியக்காரனைப் போல மாற்றிவிடுகிறது.
உதயசங்கர்
No product review yet. Be the first to review this product.