“பாண்டவர் கதையில முக்கியமான காட்சியமாக மூன்று காட்சியங்கள் இருக்கின்றன” என்று பீடிகை போட்டுக்கொண்டு ஆரம்பிக்கிறாள் பொம்மக்கா.‘கிட்ண உபதேசம்’ ஒரு காட்சியம். அதில் அறத்துக்கும்அதிகாரத்துக்குமான உறவுநிலையை எந்தவித ஆசாபாசங்களுமில்லாமல் மனுச வாழ்வோடு பொருத்திப் பார்க்கும்முக்காலமுமறிந்த சொல்லாகப்பட்டது காட்சியமாக விரிகிறது.இன்னொரு காட்சியமான ‘விசத்தடாகத்தில்’ தண்ணித்தாகத்துக்கு வரும் தருமனிடத்தில் எமதர்மராஜனானவன்,மனுச வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் அர்த்தத்தைவிடுவிக்கக் கேட்கும் புதிர்க் கேள்விகளுக்கான விடைகளை,ஊழ்வினைக்கும் மோட்சத்துக்குமான உழவோட்டமாகச்சாலடிக்கிறது.
No product review yet. Be the first to review this product.