தான் படித்த ஒரு துறையை, தான் செய்துவரும் ஒரு தொழிலை கடுமையாய் விமர்சிப்போர் மற்றும் எதிர்ப்போர், உலகிலேயே, ஒரே ஒரு துறையில்தான் இருக்கிறார்கள் என்றால், அது அலோபதியே ஆகும். ஆம். உலகெங்கும் அலோபதியை விமர்சிப்போர் அல்லது எதிர்ப்போரைப் பட்டியலெடுத்துப் பார்த்தால் அதில் அதிகம் பேர் அலோபதி படித்த மருத்துவர்களே ஆவர்.. மரபு வழி மருத்துவ முறைகள் உலகெங்கும் எல்லா நாட்டிலும் உண்டெனினும், அம்மரபு மருத்துவர்களில் ஒரு சிலர்தான் ஆங்கில மருத்துவத்தை விமர்சிக்கிறார்களே தவிர, பெரும்பாலோர் ஏதும் பேசுவதில்லை என்பதே உண்மையாகும். அப்படியிருக்கையில், அலோபதி பயின்றோரில் மட்டும் அதிகம் பேர் ஏன் எதிர்க்கிறார்கள்? பதிலை வாசிப்போர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன். ஆயினும், எனக்கு சில கேள்விகள் உண்டு. பதில்களும் உண்டு. அதுவே இப்புத்தகமாகும். இப்புத்தகத்தை எழுதக் காரணமான சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். -முன்னுரையிலிருந்து
No product review yet. Be the first to review this product.