ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.