வாழ்வின் பரிணாமத்தைப் பேசுவது பண்பாட்டு வரலாறு; சமூகத்தின் இருத்தலைப் பேசுவது இன வரலாறு. தமிழர் பண்பாட்டு வரலாறும் இன வரலாறும் ஒன்றல்ல; ஆனால் மிகவும் நெருக்கமானவை. இவை இரண்டுமே சிந்துவெளியில் தொடங்குகின்றன என்கிறார் இந்த நூலில் பக்தவத்சல பாரதி. இந்த இரண்டு வரலாறுகளும் இந்தியாவில் இன்று, கசப்பான வாதங்களைச் சந்தித்து வருகின்றன. இவற்றைத் தொல்லியல், மானிடவியல், மொழியியல், மரபணுவியல் முதலான அண்மைக்கால ஆய்வுகள் மூலம் மிக முக்கியமான, பல புதிய முடிவுகளைக் காட்டுகிறார் நூலாசிரியர். சிந்துவெளி மக்கள் யார்? இந்தியாவின் முதல் உழவர் யார்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ‘முதல் இந்தியர் யார்?’ என்பதே பதில் என்கிறது இந்த நூல். இதன் மூலம் தமிழர் பண்பாட்டு வரலாற்றில் நம்மைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. சிந்துவெளியில் தொடங்கிய ஆய்வுகள் இன்று ஹரியானா, குஜராத் வரை வந்து, அவை எதை நிறுவுகின்றன என்பதை இந்தக் குறுநூலில் ஒரு கண்திறப்பாகக் காட்டுகிறார் நூலாசிரியர். தமிழரின் பூர்வ வரலாற்றை ஒரு புதிய திசையில் காட்சிப்படுத்தும் இது, அக்கறையுள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
No product review yet. Be the first to review this product.