எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிரீடமணியாது. ஆனால் எல்லாப் புழுக்களுக்கும் பசிக்கும். பசித்த புழுக்களுக்கு மகாராணியின் மாமிசமும் பரத்தையின் மாமிசமும் ஒரே ருசிதான். பசி வலியது. அதற்கான யுத்தம் கொடுமையானது. உடலின் தேவைக்கு யாரும் பரத்தையாவதில்லை. எரியம் குடலின் தீ நாக்குகளே வாழ்வை சமைக்கின்றன. பெண்களை நம்பி எத்தனை வயிறுகள் பெண்களை நம்பி எத்தனை உயிர்கள் பெண்களை நம்பி எத்தனை பாவங்கள் மகேஸ்வரி ஒரு பருக்கை, ஒரு தூசி, ஒரு துளி இந்த நரகத்தில்.
No product review yet. Be the first to review this product.