கவிஞர் கருணானந்தம் அவர்கள் திராவிடர் கழகத்தில் 1942 முதல் பணியாற்றியவர். பெரியாரைவிட்டு அண்ணா பிரிந்து தி.மு.க தொடங்கப்பட்ட பிறகும் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நெருங்கி பழகியவர்.
அண்ணா சில நினைவுகள் என்ற இந்த நூலில் அண்ணாவின் கொள்கைப் பற்று, எளிமை, தோழமை பண்புகள் ஆகியவற்றைப் பற்றி தன்னுடைய அனுபவங்களை மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
அண்ணா முதலமைச்சரான பிறகும் திரைப்பட கொட்டகைக்குச் சென்று தம்முடன் திரைப்படங்கள் பார்த்ததையும் அவர் முதல்வரான பிறகும் அந்த எளிமையை கடைபிடித்ததையும், கடைசி காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டதையும் பதிவு செய்துள்ளார்.
அண்ணாவைப் பற்றியும் தி.மு.க தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட மாநாட்டு நிகழ்வுகளையும், பல பொதுக்கூட்டச் செய்திகளையும், நிரல்பட தொகுத்துள்ளார். இந்நூல் திராவிட இயக்கத்தின் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகும்
No product review yet. Be the first to review this product.