புலவர் குழந்தை (ஜூலை 1, 1906 - செப்டம்பர் 22, 1972) தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் ஈரோடு மாநகரத்தின் தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ”ஓல வலசு” என்னும் ஊரில் பிறந்தார்.
தந்தை பெரியாரின் மீது மரியாதையும், சுய மரியாதை கொள்கை மீது பற்றும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அமைத்த குழுவில் புலவர் குழந்தை முக்கியமானவராக இருந்தார். இவர் செய்யுள் மற்றும் உரைநூல் வடிவில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
குழந்தை அவர்கள் எழுதிய நூல்களுள் ”இராவண காவியம்” புகழ் பெற்றது. இது 1948 இல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 17.05.1971 ம் நாளில் திராவிட முன்னேற்றக் கழக அரசால் தடை நீக்கப்பட்டது.
இவர் எழுதிய மிக முக்கியமான கட்டுரை நூலான ”இந்தி ஆட்சி மொழியானால்”, “ஒன்றே குலம்” தொகுத்து நூலாக கொடுத்திருக்கிறோம்.
No product review yet. Be the first to review this product.