புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும், வியப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. கற்பனையான (Fantasy) புது உலகில் உலாவுகிற அனுபவம் என்பது மனித மனம் இயல்பாக விரும்புவதாகும். அது அனுபவமாக மட்டும் நின்று விடாமல் புத்தாக்கச் சிந்தனையை கூர்மைப்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது.
No product review yet. Be the first to review this product.