1930களின் பிற்பகுதி, ஸ்பெயினில் கடுமை யான உள்நாட்டுப் போர் மூள்கிறது. இந்தக் கொந்தளிப்பான சூழலிலிருந்து தப்ப லட்சக்கணக்கான மக்கள் மலைகள் வழியாகப் பயணம் மேற்கொள்கிறார்கள். கர்ப்பிணியும் இளம் விதவையுமான ரோஸரும் அவர்களில் ஒருத்தி. இறந்த தனது காதலனின் சகோதரனும் இராணுவ மருத்துவருமான விக்டர் தல்மாவின் வாழ்க்கையுடன் அவள் வாழ்க்கை பின்னிப் பிணைந்திருக்கிறது.
கவிஞர் பாப்லோ நெரூடா ஏற்பாடுசெய்த கப்பலில் இரண்டாயிரம் அகதிகளுடன் ரோஸரும் விக்டரும் சிலிக்குப் புறப்படுகிறார்கள். ஐரோப்பாவின் பிற பகுதிகள் உலகப் போரில் சிக்கியிருக்கும் போது இவர்கள் போரிலிருந்து தப்பி வேறொரு நாட்டில் அடைக்கலமாகிறார்கள். புதிய நாடு, புதிய அரசியல் சமூகச் சூழல் என அவர்களது வாழ்க்கை அடியோடு மாறுகிறது.
சுதந்திரத்திற்கும் அடக்குமுறைக்கும் இடையிலான போருக்கிடையில் துளிர்க்கும் உறவுகளையும் உறவின் மாறாட்டங்களையும் அவற்றின் விளைவுகளையும் இந்த நாவல் விவரிக்கிறது. போர்கள் அரசியல் அரங்கில் மட்டுமின்றிப் பண்பாட்டுத் தளத்திலும் தனிநபர்களின் வாழ்விலும் பார்வையிலும் ஏற்படுத்தும் ஆழமான மாற்றங்களையும் உணர்த்துகிறது.
No product review yet. Be the first to review this product.