'சேடிப்பெண் சொன்ன கதை' அறிவியல் புனைகதை முயற்சிகளில் ஆகச் சிறந்தது என்பதோடு தார்மீக உணர்வுமிக்கதாகவும் படைக்கப்பட்டது. - ஆஞ்சலா கார்ட்டர்
*
அச்சத்தின் நிழல் படிந்திருக்கும் சொல்முறையில் கூரிய அவதானிப்புகளும் தீவிரமான அகச்சித்திரங்களும் அவலநகைச்சுவையும் பொலிவுறுகின்றன. இண்டிபெண்டென்ட்
* குருட்டு சர்வாதிகாரம் குறித்த இந்தப் புதினம் தீட்டும் வெறுமையின் சித்திரங்கள் அசாதாரணமானவை. - சண்டே டைம்ஸ்
* செறிவானது, மெச்சத்தக்கது. -டைம் அவுட்
* ஆஃப்ரெட்டுக்கு கிலியட் குடியரசு ஒரே ஒரு வாய்ப்பைத்தான் கொடுக்கிறது: இனப்பெருக்கத்துக்கான வாய்ப்பு. அவள் மறுத்தால் முரண்பட்ட மற்ற எல்லோரையும்போல் சுவரில் தூக்கிலிடப்படுவாள் அல்லது கதிர்வீச்சில் சிக்கி மெல்லச் சாக அனுப்பப்படுவாள். ஆனால், அடக்குமுறை ஆட்சி நடத்தும் எந்த அரசாலும் ஆசைகளை ஒழித்துவிட முடியாது - ஆஃப்ரெட்டுடைய ஆசைகளையும், அவளுடைய எதிர்காலத்தைக் கையில் வைத்திருக்கும் இரண்டு ஆண்களுடைய ஆசைகளையும்.
No product review yet. Be the first to review this product.