தமிழில் முதல் புலப்பெயர்வு நாவல் என்று சொல்லலாம். பழைய இராமநாதபுரம் ஜில்லா மக்களின் வாழ்க்கை கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன்பு வரை இந்தோனேசியாவிலும், மலையாவிலும் வட்டித் தொழில் செய்வதும், அதில் வேலை பார்ப்பதும் தான் பிரதானமாக இருந்தது. இதனை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப.சிங்காரம். இரண்டாம் உலகப் போர் கால மலையாவில் கதை தொடங்குகிறது நேதாஜி மீது இருந்த நம்பிக்கை, அவர் மரணத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், போரின் இழப்புகள், சின்னதொரு காதல் கதை, தத்துவங்கள் என்று அந்தக் காலகட்டத்திற்கே இப்புதினம் நம்மை அழைத்து செல்கிறது.
No product review yet. Be the first to review this product.