புலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவாக ’புயலிலே ஒரு தோனி’ புதினத்தைக் கூறலாம். இதில் வரும் நாயகன் பாண்டியன் தனி மனிதன் அல்ல. புலம் பெயர்ந்த நிலத்தில் தங்களுக்கான வாழ்க்கையைத் தேடும் ஒவ்வொருவரின் மனசாட்சியாகவும் விளங்குகிறான். பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் தங்களின் மரணம் குறித்த அக்கறையின்மையை நம்மால் உணர முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும். நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது.
No product review yet. Be the first to review this product.