"அப்பா, ஹரி. உன் விஷயத்தை நீ சுலபமாகத் தீர்த்துகொண்டு விட்டாய். ஆனால் பிரச்சினை அவ்வளவு எளிதல்ல. உன் புதுச் செருப்பை எடுத்துக்கொண்டு, பழைய செருப்பை உனக்காக வைத்துவிட்டுப் போனதாக நீ முடிவு கட்டிவிட்டாய். அப்படித்தான் நடந்தது என்பது என்ன நிச்சயம்? செருப்பே கொண்டு வராதவன் உன் செருப்பை மாட்டிக் கொண்டு போயிருந்தால்? விஷயம் விபரீதம். உன் செருப்பை ஒருவன் திருடிக்கொண்டு போய்விட்டான். நீ வேறு ஒருவன் செருப்பைத் திருடி வந்துவிட்டாய். தர்மப்படியும் குற்றச் சட்டப்படியும் குற்றம். உன் செருப்பை ஒருவன் எடுத்துக்கொண்டு போனதற்கு வேறு ஒன்று நீ எடுத்து வந்தது பரிகாரம் ஆகிவிடுமா? ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றப் பரிவர்த்தனை ஆய்விடாது." - புத்தத்திலிருந்து...
No product review yet. Be the first to review this product.