அங்கு கண்டேன், இங்கு தோன்றியது, அவர்கள் பார்த்ததாகச் சொன்னார்கள் என்று தொடங்கி ஆவி பற்றி பலவிதமான கதைகள் பல வடிவங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் ஆவி இருக்கிறதா? வேற்றுகிரகம், ஏலியன், பறக்கும் தட்டு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அமெரிக்காவில் இன்றளவும் பலவிதமான ஆய்வுகள் நடக்கின்றனவாமே? அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையில் இருக்கின்றன என்றுதானே அர்த்தம்? கண் இல்லாத மனிதன், பேய் வீடு, ரத்தக்காட்டேரி, மரணக் கிணறு, சிவப்புப் பிசாசு, இறந்த பின்பும் துடிக்கும் இதயம் என்று தொடங்கி உலகம் முழுக்க நடைபெற்ற அல்லது நடைபெற்றதாகச் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்கள் இந்நூலில் திரட்டப்பட்டுள்ளன. அஞ்சிக்கொண்டும் அலறிக்கொண்டும் வாசிக்கவேண்டிய நூல். இருள் கவிந்திருக்கும்போது படிக்காமல் இருப்பது நலன் பயக்கும்.
No product review yet. Be the first to review this product.