நம்முடைய அனைத்து உறவாடல்களிலும் பேரப்பேச்சில் சிறந்து விளங்குவது இன்று ஓர் அத்தியாவசியமான அம்சமாக ஆகியுள்ளது. வெற்றி வல்லுநரான பிரையன் டிரேசி, தன்னுடைய தொழில் வாழ்க்கையில் பல கோடி டாலர்கள் பெறுமானமுள்ள ஒப்பந்தங்களை ஒரு இலாபகரமான முறையில் பேரம் பேசி முடித்துள்ளதோடு, ஒரு தலைசிறந்த பேரப்பேச்சு வல்லுநராக ஆவதற்குத் தேவையான உத்திகள், யோசனைகள், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றையும் தன் அனுபவங்களின் ஊடாகக் கற்று கொண்டுள்ளார். இந்நூலில் அவர் தன்னுடைய பழுத்த அனுபவங்களைச் சாறாகப் பிழிந்து வாசகர்களுக்குத் தந்துள்ளார். அவற்றில் இவையும் அடங்கும்: • ஆறு முக்கியப் பேரப்பேச்சுப் பாணிகளில் எதை எங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது எப்படி • பேரப்பேச்சில் பிறருடைய உணர்ச்சிகளை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி • பேரப்பேச்சு ஒப்பந்தங்களில் உங்களுக்கு உடன்பாடு உள்ள மற்றும் உடன்பாடு இல்லாத விஷயங்களில் தெளிவைப் பெறுவது எப்படி • பேரப்பேச்சில் இருதரப்பும் வெற்றிக் கனியைச் சுவைக்கும்படி செய்வது எப்படி • பேரப்பேச்சிலிருந்து எப்போது இலாபகரமாக வெளியேற வேண்டும் என்பதை அறிந்து கொள்வது எப்படி பேரப்பேச்சு அளவுக்கு வாழ்க்கையில் உங்களுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தித் தரக்கூடிய வேறு ஒரு திறன் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
No product review yet. Be the first to review this product.