இலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல மிகப் பெரியது. அவருடைய சமுதாயப் பார்வை மிகவும் தெளிவானது; உறுதியானது.
எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் அவருடைய பாதிப்பில்லாத படைப்பாளியே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 1905-முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-இல் அவர் எழுதிய The Madman எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்புதான் ‘பித்தன்’ என்ற இந்நூல்.
No product review yet. Be the first to review this product.