இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் வடிவத்தில் சுருக்கமானவை; பொருளில் விரிவானவை. சிறு நொடி நிகழ்வுக்குப் பெரும் பொருளின் விரிவைக் கொடுப்பவை. சிறு சுடரின் மினுக்கலில் பெரும் வெளிச்சத்தை எதிரொளிப்பவை. நவீன் கிஷோரின் கவிதைப் பார்வை பாரபட்சமற்றது. கருணை மிகுந்தது. மனித அக, புற வாழ்வின் துயரங்களையும் சமூக நடவடிக்கைகளின் மேன்மைகளையும் கொடூரங்களையும் சித்தரிக்கும் அதே சமயம் மனிதர்களுக்கிடையிலான இணக்கத்தையும் எடுத்துக்காட்டுவது. இயற்கையை வியப்பதுடன் விசாரிக்கவும் செய்வது. நவீன் கிஷோரின் கவிதை மொழி மிகப் புதுமையானது. சுதந்திரமானது. முன்னுதாரணம் இல்லாதது.
No product review yet. Be the first to review this product.