Skip to product information
இந்திய அரண்கள் Indiya Arangal

இந்திய அரண்கள் Indiya Arangal

Rs. 110.00

இந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர்.

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RAW) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. மாவோயிஸ்ட், லோக்கல் தீவிரவாதிகளின் செயல்களைத் தடுக்க ஐ.பி (I.B) என்ற உளவு அமைப்பு இருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ATS,  EIC, CEIB, NCB, NATGRID, WCCB, NTRO, JCB, SFIO, ED, CID, CAPF, CVC, NIA போன்ற அமைப்புகளின் உதவியில்லாமல் இந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. ஒரு சில அமைப்பினர் உதவியில்லாமல் காவல்துறையினரோ, இராவணுவமோ, உளவுத்துறையோ தனியாகச் செயல்பட முடியாது. தங்களின் அதிரடி ஆப்பரேஷன், மீட்புப் பணி, எதிரிகளை வீழ்த்துவது போன்ற பல முயற்சிகளில் அவர்களின் உதவியில்லாமல் வெற்றிபெறவோ, பல தாக்குதல்களைப் புலனாய்வு செய்யவோ முடியாது.

நமது நாட்டைக் காக்கும் உண்மையான அரண்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் எளிமையான கையேடு.


Author : Guhan

Publisher : We Can Books

 

You may also like