சர் ஐசக் நியூட்டன் Sir Issac Newton
சர் ஐசக் நியூட்டன் தான் படிக்கும் காலத்திலேயே ஒளியின் இயல்பு பற்றிய ஆய்வுகளை செய்தார். எப்படி வானவில் தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார். அதற்கு VIBGYOR என்றும் பெயரிட்டார்.
தொலைநோக்கியைக் கண்டுபிடித்துப் பல விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவியாகப் பயன்படுத்தினார்.
புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இயற்கை தத்துவத்தின் கணித விதிகள், வானவியல்துறை, பொருளியல் துறை, ஒளியியல் ஆகியவைகளைக் குறித்து ஆய்வுகள் எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய புத்தகங்கள் இன்றைக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்கவும் உதவுகிறது.
இப்படி அறிவியல் கலைக் களஞ்சியத்தில் மற்ற விஞ்ஞானிகளைவிட சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளுக்கு அதிகமான பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பெரும் விஞ்ஞானி நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் சிறு நூல் இது.
Author : Guhan
Publisher : We Can Books