Skip to product information
அவகாடோவாய் இருப்பது
Rs. 180.00
Author: இன்பா
Publisher Name : Ethir Veliyeedu
ஒரு நிலத்தில் கால் ஊன்றி காற்றில் பறக்கும் சிறுமியின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்துகள்களுக்குச் சுவை அதிகமென்கிறது அதன் ருசியறிந்த நாக்கு. இன்பா அப்படியொரு ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகிறார். இந்திய-சிங்கப்பூர் நிலங்களில் அவரின் பாதங்கள் மாறி மாறி ஊன்றுகின்றன. கால ஊஞ்சலில் செல்லும் நிலத்துக்குச் சொற்கள் உண்மையாக இருக்கவே பரிதவிக்கின்றன. சிங்கப்பூர் நிலத்திலிருந்து வெளியே நின்று வாசிப்பவர்களுக்கு இக்கவிதைகளால் புதிய அனுபவம் கிடைக்கிறது. உள்ளிருப்பவர்களுக்கு அவர்கள் கவனித்ததையும், கவனிக்கத் தவறியதையும் சுட்டிக்காட்டுகிறது. இத்தொகுப்பை வாசித்து முடித்த பிறகு ஒரு புதிய நிலம், வாழ்க்கையை அறிந்து கொண்டார் போலத் தத்தளிப்பு மனதில் உருவாகிறது.
- ஸ்டாலின் சரவணன்