பாரதியின் தராசு
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
நூலாசிரியர்: ய.மணிகண்டன்
பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது தராசுக் கடை வைத்து ‘வியாபாரம்’ செய்துவந்தார் என்பது வியப்பளிக்கும் செய்தியல்லவா? ஆனால் அவர் பயன்படுத்திய தராசு கண்ணுக்குத் தெரியாத மாயத் தராசு; ஞானத் தராசு. பாரதியார் 1915இல் எழுதத் தொடங்கிய உரைநடைத் தொடர் ‘தராசு’ என்னும் தலைப்பில் 1918வரை அவ்வப்போது ‘சுதேசமித்திர’னில் வெளிவந்தது. பத்திரிகைத் துறையில் பாரதி மேற்கொண்ட ‘பத்தி’ எழுத்து வகையின் முன்னோடி முயற்சி இது. தமிழ்ச் சமூக, இந்திய, உலக நடப்புகளெல்லாம் ‘தராசு’ தொடர் வாயிலாக வாசகர் நெஞ்சில் பதிந்தன. பாரதிதாசனைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் இந்தத் தொடர்தான். நூற்றாண்டு இடைவெளிக்குப் பின் பாரதியின் ‘தராசு’ காலநிரலில், ‘சுதேசமித்திரன்’ மூலத்தின் அடிப்படையில், கண்டறியப்பட்ட புதிய பகுதிகளோடு, ஒரே தொகுதியாகப் பாரதி அறிஞர் ய. மணிகண்டனின் தேர்ந்த பதிப்பில் இப்போது முதன்முறையாக வெளிவருகிறது.