C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு
ஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது. ஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான். சி.பி.ஐ என்பவர்கள் யார்? இந்தப் பணிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள்? அரசியல் தலையீடுகளுக்குப் பணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏன் வருகிறது? இப்படி, நம்மில் பலருக்கும் சி.பி.ஐ குறித்து பல கேள்விகள் இருக்கிறது. இத்தனைக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் புரிந்துகொள்ள உதவும்.
Author : Guhan
Publisher Name : We Can Books