Skip to product information
காந்த்ருக்

காந்த்ருக்

Rs. 550.00

 

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

நூலாசிரியர்: சதீஷ் சப்பரிகே 
மொழிபெயர்ப்பாளர்: கே. நல்லதம்பி

வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன; ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்கிறதா என்று தேடுவதுதான் தன்னைத் தேடும் பயணம். மனிதர்களிடம் தனிமை மீதான அச்சமும் வருத்தமும் மாறி, அதன்மீது விருப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆழமான, எல்லையற்ற உறவின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. என்ன தேடுகிறோமென்று தெரியாமலேயே எதையோ தேடி அலைகிறோம். இந்தக் கதையின் சித்தார்த்தனும் அப்படி எதையோ தேடிப் புறப்படுகிறான். அந்த சித்தார்த்தன் போதி மரத்தடியில் ஞானம் பெற்றான். இந்த சித்தார்த்தன் காதல், காமம், செல்வம், எல்லாம் துறந்து இமயம் சென்றாலும் காதல் அவனைத் துறப்பதாக இல்லை. அதிலிருந்து மீண்டு தன்னைக் கண்டுகொள்கிறானா இந்த சித்தார்த்தன்? எல்லாம் துறந்து செல்லும் சித்தார்த்தர்கள் புத்தராகிறார்களா? கன்னடத்தில் சதீஷ் சப்பரிகே எழுதிய இந்த நாவலை, மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற கே. நல்லதம்பி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.


You may also like