Skip to product information
கன்னிமார் சாமி

கன்னிமார் சாமி

Rs. 190.00

 

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

நூலாசிரியர்: சுஜாதா செல்வராஜ்

சுஜாதா செல்வராஜின் இந்தக் கதைகள் பெண்களின் நடைமுறை வாழ்க்கையின் அவலங்களைக் கூறுபவை. பெண்களின் வாழ்க்கையைத் தனித்துக் காணாமல் மனித வாழ்வின் பரந்த பின்னணியில் வைத்துப் பார்க்கிறார் சுஜாதா. குறிப்பிட்ட ஒரு சோகத்தைக் கூறும்போது, அதன் பின் உள்ள வரலாற்றுச் சோகத்தையும் பார்க்கவைக்கிறார். சுஜாதா அடிப்படையில் கவிஞர். அவருடைய கவித்துவச் செறிவு கதைகளைக் கச்சிதமாகக் கட்டமைக்க உதவுகிறது. பல்வேறு அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்லும் இவருக்குச் சிலவற்றைச் சொல்லாமல் விடுவதன் முக்கியத்துவமும் தெரிந்திருக்கிறது. தன் படைப்புத்திறனில் நம்பிக்கை உள்ளவர்களாலேயே சில விஷயங்களைச் சொல்லாமலேயே உணர்த்த முடியும். அத்தகைய நம்பிக்கை உள்ள படைப்பாளி களில் ஒருவர் சுஜாதா செல்வராஜ்.


You may also like