Skip to product information
கவிமணி: நினைவோடை
Rs. 115.00
எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் சுந்தர ராமசாமி. நிறைவாழ்வு வாழ்ந்த கவிமணிக்கு உரிய அங்கீகாரம் அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலேயே கிடைத்தது. கவிமணியின் மறைவுக்கு முந்தைய சில ஆண்டுகளில் சுந்தர ராமசாமி அவரோடு பழகினார். அந்த அனுபவங்கள் சுவாரசியமான ‘நினைவோடை’ப் பதிவாக ஆகியுள்ளன. இலக்கியம், அரசியல் ஆகியவை பற்றி முற்றிலும் வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தாலும் நேர்மையாகவும் மிகுந்த மரியாதையுடனும் கவிமணியின் ஆளுமையைத் தேர்ந்த மொழியில் சித்திரித்துள்ளார் சுந்தர ராமசாமி. - ஆ.இரா. வேங்கடாசலபதி