Skip to product information
கிருமிகள் உலகில் மனிதர்கள்

கிருமிகள் உலகில் மனிதர்கள்

Rs. 150.00

 

 

நாம் வாழும் இவ்வுலகை உருவாக்கியது கிருமிகள் தான் என்பதையும், கிருமிகள் இல்லாத இயற்கை சுழற்சி சாத்தியமில்லை என்பதும் அறிவியல் விளக்கும் உண்மை. 85 லட்சம் வகையான கிருமிகள் இவ்வுலகில் வாழ்கின்றன. இவை பிரபஞ்சம் முழுவதும் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன. நம் வீட்டு சமையலறையில் இருந்து, நிலக்கரிச் சுரங்கங்கள், ஏரிகள், குளங்கள், வாயு மண்டலம் என அனைத்து சுழற்சியிலும் கிருமிகளின் பணிகள் மிக முக்கியமானவை. கிருமிகள் எப்படி இயற்கை சுழற்சியில் பங்கு பெறுகின்றன? கிருமிகளின் வகைகளில் வாயுக்களை உணவாகக் கொள்பவை, வேதியியல் பொருட்களை உணவாகக் கொள்பவை இன்னும் இது போன்று, உலகில் உள்ள எல்லா பொருட்களையும் உணவாகக் கொள்ளக் கூடிய கிருமிகளும் உள்ளன. ஈஸ்ட், பூஞ்சை, பாக்டீரியா, ஆல்கா, வைரஸ் என்று பல வகைக் கிருமிகள் விதம் விதமான உணவுகளை உண்டு வாழ்கின்றன. இப்படி கிருமிகளின் உலகைப் பற்றியும் அது குறித்து பரப்பப்படும் பல்வேறு பொய்கள் குறித்தும் ஆதாரப்பூர்வமாக விளக்குகிறது இந்நூல்.

You may also like