Skip to product information
கூளமாதாரி

கூளமாதாரி

Rs. 390.00

பண்ணையில் வேலை செய்யும் தலித் சிறுவர்களின் வாழ்வை அவர்களின் பார்வையின் வழியாகவே சித்தரிக்கும் நாவல் 'கூளமாதாரி'. பதின்பருவத்தை நெருங்கும் அந்தச் சிறுவர்களின் அக, புற உலகை இந்த நாவல் உயிர்த்துடிப்புடன் விவரிக்கிறது.
வறுமையின் பிடியில் இருக்கும் அவர்கள் அதிகாரம், சுயநலம், தீண்டாமை முதலியவற்றால் பாதிக்கப்படும் விதத்தைக் காட்டும் இந்த நாவல், அந்தச் சிறுவர்களின் அன்பு, காதல், காமம் ஆகியவற்றையும் நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது.

 
சிறுவர்களின் வாழ்க்கையோடு அவர்கள் வாழும் நிலமும் அதன் பல்வேறு பருவங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இயற்கையும் நாவலின் பாத்திரங்களில் ஒன்றாக உள்ளது. மனிதருக்கும் ஆடுகளுக்குமான உறவுவையும் இந்த நாவல் பேசுகிறது.


சிறுவர்களின் வாழ்வையும் அதைப் பாதிக்கும் காரணிகளையும் சமூக அரசியல் யதார்த்தங்களின் பின்னணியோடு இந்த நாவல் அணுகுகிறது. விளிம்பு நிலைப்பட்ட வாழ்வின் பதிவு 25 ஆண்டுகள் கடந்த பின்பு புதிய அர்த்தங்களுடன் துலங்குகிறது. காலத்தின் போக்கில் வலுக்கூடிய இந்த நாவல் செவ்வியல் தன்மை பெற்று ஒளிர்கிறது.

Language :Tamil

Author : பெருமாள் முருகன்

Publication : காலச்சுவடு பதிப்பகம்

You may also like