மசிடோனிய மண்ணில் உதித்த செங்கதிர்,
மாபெரும் உலகை ஆளவந்த பேராற்றல்!
அரிஸ்டாட்டில் ஊட்டிய அறிவின் சுடர்,
அகிலத்தை வெல்லத் தூண்டிய வீரப்புயல்!
பாகீரதி நதிக்கரை வரை அவன் பாதம் தொட்டது
பார்த்த இடமெல்லாம் பாரசீகம் மண்டியிட்டது!
வெல்லாத போர்க்களமே அவன் வரலாற்றில் இல்லை,
வீழ்த்தாத பேரரசுகளும் இல்லை!
புயல்வேகப் புரவியில் உலகை வளைத்தான்!
ஆனாலும் காலத்தின் கைகளில் அவன் தோற்றான்.
ஆயினும், 'மாமன்னன்' என வரலாற்றில் நிலைத்து நின்றான்!
இளம் வயதிலேயே உலகை நடுங்கச் செய்த மாவீரன் அலெக்சாண்டரின் வீர வரலாற்றை வரைகிறது இந் நூல்