மஞ்சள் வர்ண மரணம்
Language : Tamil
Author: மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
Translator: எம். ரிஷான் ஷெரீப்
Publisher Name : Ethir Veliyeedu
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் ஒரு விடுதியாகத் தனது பரம்பரை வீட்டை அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதிர்கன்னியின் ஜீவிதக் குறிப்புகளே இந்த நூலில் ஒரு கதையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை தனது வாழ்க்கைக்கும், நிஜ வாழ்வியல் அனுபவத்திற்கும் மிக மிக நெருக்கமானது மனுஷா.
பெண்களின் அனுபவங்களை ஆழமாகப் பதிவு செய்வதை மனுஷாவின் எழுத்தின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதலாம். குடும்பம், சமூகம், மதம் மற்றும் மரபுகளால் விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் வாழும் பெண்களின் மனநிலையை அவர் இந்தக் கதையிலும் மிகவும் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார்.
மனுஷாவின் கதைகளில் வரும் பெண்கள் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. அவர்கள் தங்களுக்கே உரிய ஆசைகள், கனவுகள், போராட்டங்கள் ஆகியவற்றோடு தன்னம்பிக்கை கொண்ட முழுமையான மனிதர்களாகத் திகழ்கிறார்கள். அந்தப் போக்கு அவரது இந்தக் கதைக்கும் ஒரு தனித்துவமான பலத்தைத் தந்திருக்கிறது