Skip to product information
நாளை மற்றுமொரு நாளே. . .
Rs. 195.00
எழுத்தாளர் : ஜி. நாகராஜன்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
தன்னை ஏமாற்றியவனே தனக்குத் தந்திரத்தைக் கற்றுக்கொடுக்கும் குரு என்று ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களின் அடையாளங்களை, அவர்களின் மனப்போக்குகளை ‘நாளை மற்றொரு நாளே...' நாவலில் பதிவுசெய்திருக்கிறார் ஜி. நாகராஜன்.
கந்தனின் ஒருநாள் பொழுதுதான் இந்த நாவல். கிளைக்கதைகளையும் துணைக் கதாபாத்திரங்களையும் கொண்டு விரியும் கந்தனின் ஒருநாள் பொழுதின் வழியாக, தமிழ்ச் சமூகத்தின் அடியாழத்தில் மறைந்திருக்கும் சல்லித்தனத்தை, கயமையை, சுரண்டலை, இச்சையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.
புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சாமானியர்களின் உலகை அதன் அசல்தன்மையுடன் ஜி. நாகராஜன் காட்டுகிறார்.
தமிழில் சிறந்த படைப்புகளில் ஒன்றான ‘நாளை மற்றொரு நாளே...' ரவி பேலட்டின் கோட்டோவியங்களுடன் புதிய பொலிவுடன் வெளியாகிறது.