நாலுகால் சுவடுகள்
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
நூலாசிரியர்: நோயல் நடேசன்
விலங்குகளுக்குச் சிகிச்சை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் கால்நடை மருத்துவர் நோயல் நடேசன். ஆழ்ந்த மருத்துவ அறிவும் அனுபவச் செழுமையும் நுட்பமான அவதானிப்பும் மனோபாவங்களைப் படிக்கும் கூர்ந்த நோக்கும் இணைந்த பார்வை கொண்டவை இவரது நூல்கள். சிக்கலான சிகிச்சை முறைகளைக் கூடப் போதுமான அளவிலும் எளிமையாகவும் விவரணை செய்கிறார். அதாவது ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு மனோபாவம் கொண்ட மனிதரைச் சந்திக்க முடிகிறது. வீட்டு விலங்குகளின் இயல்புகளும் அவை மனிதருக்கு ஆதரவாக இருக்கும் நிலையும் பின்னணியில் வந்துகொண்டே இருக்கின்றன. தமிழில் அனுபவக் கட்டுரைகளுக்குக் கிட்டத்தட்ட நூறாண்டு வரலாறு உண்டு. அதில் கால்நடை மருத்துவர் ஒருவரின் அனுபவம் இவ்வகையில் பதிவான தில்லை. ஆகவே இக்கட்டுரைகளே முன்னோடி என்று சொல்லலாம். - பெருமாள்முருகன்