நினைவுகளின் வேட்டைக்களம்
Language : Tamil
Author: யோகோ ஒகாவா
Translator: சி. லுபுனா லிலானி
Publisher Name : Ethir Veliyeedu
சர்வதேச புக்கர் பரிசு 2020-க்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற நாவல்
பெயரிடப்படாத ஒரு தீவில், பொருள்கள் மறைகின்றன: முதலில் தொப்பிகள், பின்னர் ரிப்பன்கள், பறவைகள், ரோஜாக்கள்...
அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்த மாற்றங்களைக் கவனிக்காமல் இருக்கின்றனர், அதேசமயம், அவற்றை நினைவில் வைத்திருப்பவர்கள் ரகசிய போலீசுக்குப் பயந்து வாழ்கின்றனர்.
அந்தத் தீவில் உள்ள மக்களைப் பொறுத்தவரை மறைந்துபோன பொருள் இனி அவர்களுக்கு எந்த அர்த்தமும் கொண்டதல்ல. அவர்கள் அதைத் தோட்டத்தில் எரித்துவிடலாம், ஆற்றில் வீசலாம், அல்லது ரகசிய போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம். விரைவில், அந்தத் தீவு தன் இருப்பையே மறந்துவிடுகிறது.
ஓர் இளம் நாவலாசிரியை, தனது பதிப்பாசிரியர் ரகசிய போலீசாரால் அழைத்துச் செல்லப்படும் அபாயத்தில் இருப்பதை அறிந்ததும், அவரைக் காப்பாற்ற விரும்புகிறாள். ஏதோ காரணத்தால் அவர் எதையும் மறப்பதில்லை. மேலும் தனது நினைவுகளை மறைத்துக் கொள்வதும் அவருக்குக் கடினமாகி வருகிறது. அடுத்து காணாமல் போக இருப்பது எதுவென்று யாருக்குத் தெரியும்?