Skip to product information
பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015)

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988 - 2015)

Rs. 920.00

1988 முதல் 2015 வரை பெருமாள்முருகன் எழுதிய 83 கதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு நூல் இது. 'திருச்செங்கோடு', ‘நீர் விளையாட்டு', 'பீக்கதைகள்', 'வேப்பெண்ணெய்க் கலயம்' ஆகிய நான்கு நூல்களில் இடம்பெற்ற கதைகளும் அவற்றில் இடம்பெறாத சில கதைகளும் இதில் உள்ளன. பின்னோக்கிய காலவரிசையில் கதைகள் வைக்கப்பட்டுள்ளன.
கிராமத்தைக் களமாக அமைத்தும் வேளாண்குடிகளைப் பாத்திரங்களாகக் கொண்டும் பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. உழவுப் பண்பாடும் உளவியலும் சாதியச் சிக்கல்களும் கதைகளில் பரிசீலிக்கப்படுகின்றன. தமிழ்ச் சிறுகதைகள் பேசத் தயங்கிய பாடுபொருள்கள் இக்கதைகளில் தாராளமாகப் பேசப்படுகின்றன. இயல்பான கதை கூறல், வேறுபட்ட வடிவ முயற்சி, உயிர்ப்புள்ள வட்டார மொழி, வாசிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொண்டவை இவை. பெருமாள்முருகனின் படைப்புப் பயணத்தை அறிவதற்கும் அளவிடுவதற்கும் உடன் பயணிப்பதற்குமான பெரும்பாதையாக இக்கதைகள் நீள்கின்றன.

Language :Tamil

Author : பெருமாள் முருகன்

Publication : காலச்சுவடு பதிப்பகம்

You may also like