Skip to product information
பொய்யுரு

பொய்யுரு

Rs. 130.00

 

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

நூலாசிரியர்: வில்லியம் எஸ். பர்ரோஸ் 

மொழிபெயர்ப்பாளர்: பா. வெங்கடேசன் 

வில்லியம் எஸ். பர்ரோஸ் 1991இல் எழுதிய இந்தக் குறுநாவல் கேப்டன் மிஷனின் கதையுடன் தொடங்குகிறது. அவனது அனுபவங்கள், அத்தீவு சுற்றுச்சூழல் பன்மையத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் வந்தேறிகளின் வாழ்க்கை என்று நகர்ந்து, கொள்ளை நோய்கள், மருத்துவம் என்று வெவ்வேறு கதைத் (துண்டு) தளங்களுக்கிடையே ஊடாடுகிறது. இந்தக் கதைத்துண்டுகளின் தளம் பரந்தது. காலனியாதிக்கம், பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் பன்மைய அழிவு, கொள்ளைநோய்களின் தோற்றம், அவற்றுக்கான மருத்துவம், அதன் பின்னாலுள்ள அரசியல், மதங்களால் பீடிக்கப்பட்ட சமூகத்தின் கையறுநிலை என்று உலகளாவிய பிரச்சினைகளிலிருந்து தன் கதைக்கான துண்டுகளைத் தெரிவு செய்கிறது இக்குறுநாவல். அத்தனை துண்டுகளும் பிரதிபலிப்பது இவையனைத்தும் நிறைந்த நிஜத்தையும், அதைக் கண்டும் காணாமல் கடந்துபோகும் நம் வாழ்வின் நிதர்சனத்தையும். பொய்யுரு நாம் பார்க்கத் தவறும் பிரச்சினைகளைப் பரப்பிவைத்து நமது பார்வையை மாற்ற முயல்கிறது.


You may also like