Skip to product information
தி. ஜானகிராமன் நினைவோடை

தி. ஜானகிராமன் நினைவோடை

Rs. 100.00

எழுத்தாளர் : சுந்தர ராமசாமி
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்

தமிழின் முக்கியமான ஆளுமைகள் குறித்த சுந்தர ராமசாமியின்

‘நினைவோடை வரிசையில் ஏழாவது நூல் இது. இலக்கிய

வாசகர்களை மட்டுமல்லாமல் வெகுஜன வாசகர்களையும் தன்

சிறுகதைகளாலும் நாவல்களாலும் கவர்ந்தவர் தி. ஜானகிராமன்.

படைப்புகள் மூலமாக அவரது இலக்கிய முகத்தை மட்டுமே

அறிந்த வாசகர்களுக்கு தி. ஜா. வின் இன்னொரு முகத்தை

அறிமுகம் செய்கிறது இந்நூல்.

ஜானகிராமனுடன் நேரில் பழகியவர்கள், ‘அவருக்கு

இணையான ஒரு ஸ்னேகிதனை’ப் பார்த்ததே கிடையாது என்று

சொல்லும் வகையில், எந்தவிதமான எதிர்பார்ப்போ

ஆக்கிரமிப்போ இல்லாமல் சகஜமாக நட்புறவு கொள்ளும்

சுபாவத்தையும் சக எழுத்தாளரின் படைப்பாற்றலை

வெளிப்படையாகவே பாராட்டும் உயர் குணத்தையும் இயல்பான

அவரது தன்னடக்கத்தையும் தனக்கேயுரிய பாணியில்

மிகையேதுமின்றிப் பதிவு செய்திருக்கிறார் சுந்தர ராமசாமி.

You may also like