தீர்க்கதரிசி
கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கையே நமக்குச் சொல்லும் ஒரு நீண்ட கவிதை. .
அன்பு என்றால் என்ன? துயரம் ஏன் வருகிறது? சுதந்திரம் எங்கே தொடங்குகிறது? மனிதன் எதற்காக வாழ்கிறான்? என்ற பல கேள்விகளுக்குப்
பதில்களைத் தராமல், நம் உள்ளத்தில் புதிய கேள்விகளை விதைக்கிறார் ஜிப்ரான் அவர்கள்.
அவரது வார்த்தைகள் புத்தகத்தின் பக்கங்களில் மட்டும் இல்லை; நம் தனிமையின் இரவுகளில், நம் காதலின் மௌனங்களில், நம் கண்ணீரின் விளிம்புகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன.
ஜிப்ரான் பேசுவது காலத்திற்காக அல்ல — மனித இதயத்திற்காக.
‘தீர்க்கதரிசி’ ஒரு சாதாரன புத்தகம் இல்லை. வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நமக்குள் நாம் மேற்கொள்ளும் ஒரு நீண்ட பயணம். உலகில் வாசிக்க வேண்டிய நூறு முக்கியமான நூல்களில் “தீர்க்கதரிசி’ அவசியம் இருக்கும்.