Skip to product information
தென்திசை ஏகும் நாரைகள்

தென்திசை ஏகும் நாரைகள்

Rs. 450.00

ஆசிரியர் : லீசா ரிட்சன்
தமிழில் : கண்ணையன் தட்சணாமூர்த்தி

Publisher: TWO SHORES PRESS

SWEDISH BOOK OF THE YEAR AWARD 2024 தொண்ணூறு வயதைத் தொடும் போ' ஆண்டர்சனுக்கு கவனிப்புப் பணியாளர்களின் பராமரிப்பை விடவும் தன் செல்ல நாய்க்குட்டி சிக்ஸ்டனின் உடனிருப்பே மனநிறைவைத் தருகிறது. முதுமையைக் காரணம் காட்டி நாயை அவரிடமிருந்து பிரித்துவிட முயலும் மகனின் அடாவடியால் மனம் வெதும்பினாலும் அவன் மீதான பாசத்திற்கு அவரால் அணை போட முடியவில்லை. மறதி நோயாளியாகி வேற்றூரில் காப்பகத்தில் இருக்கும் மனைவியிடம் தன் மன அவஸ்தைகளை மானசீகமாகப் பேசுகிறார். போ'வின் அந்திம நாட்களில் விழிப்பிலும் கனவிலும் வெளிப்படும் காட்சிகளின் வழியே அவருடைய வாழ்வின் சுவாரஸ்யமான பக்கங்கள் விரிகின்றன. 'உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்' என்று எவரிடமாவது நிஜமாகவே நீங்கள் சொல்ல முயன்று அதை எப்படிச் சொல்வதென்று தெரியாத நிலையில் அவர்களுக்குப் பரிசளிக்கக்கூடிய புத்தகம். -ஃப்ரெட்ரிக் பெக்மென்

 

You may also like