தி. ஜானகிராமன் சிறுகதைகள் (1937-1982)
- Author : தி. ஜானகிராமன்
- Publisher Name : காலச்சுவடு பதிப்பகம்
முன்னோடித் தமிழ்ச் சிறுகதையாளர்களில் எல்லாத் தரப்பினராலும் ஏற்கப்பட்டவர் தி. ஜானகிராமன். அவரது கதைகள் இலக்கியத்தை வாழ்க்கை அனுபவமாகக் கருதும் தீவிரர்கள், வாசிப்பை இன்பமாக எடுத்துக்கொள்பவர்கள், பொழுது போக்குச் சுவாரசியத்தை மட்டும் நாடுபவர்கள் ஆகிய அனைவருக்கும் ஈடுகொடுப்பவை, இலக்கியத்தரமும் அனைத்துத் தரப்பின் ஏற்பும் கொண்ட கதைகளை எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வாசகர்கள் எல்லாராலும் போற்றப்படும் எழுத்தாளராக ஒருவர் கவனம் பெறுவது அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்ற சில எழுத்தாளர்களில் தி. ஜானகிராமன் முதன்மையானவர்.
இலக்கியப் பெறுமதி குன்றாமலும் அதே சமயம் பெரும்பான்மை வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்படுபவையாகவும் அமைந்த கதைகள் தி.ஜானகிராமனுடையவை. இந்த இயல்பு காரணமாகவே அவை வெகுஜனப் பிரபலமும் அடைந்தன. இன்றும் பெருமளவு வாசகர்களால் வாசிக்கப்படுபவையாக இருக்கின்றன.