Skip to product information
வெளி ஊடாடு

வெளி ஊடாடு

Rs. 133.00

எழுத்தாளர் :  முச்சந்துமன்றம்

பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ்

இந்த நூலின் முக்கியமான பகுதியாக நான் கருதுவது, நூல் எடுத்துக்காட்டும் உரையாடல்கள், அந்த உரையாடல்களின் ஒவ்வொரு வரியிலும் அடுத்தடுத்த வரிகளுக்கு இடையிலும் அவ்வளவு சமூக அரசியல் நெறிப்புகள். இதைத்தான் யாம் உண்மையில் நவீன இலக்கியத்தில் பின் நவீனத்துவம் என்போம். அத்தகைய உரையாடல்களின் பன்முகத்தன்மையும் பற்திசை அரசியலும் முச்சந்துமன்றம் பேச எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்குப் பேராசிரியத் தன்மையைத் தருகின்றன. எப்பொழுது பெண்ணியத்தைப் பேசினாலும் பல திசைகளிலிருந்து கயிறுகளை இழுத்து வரும் துணிவும் தெளிவும் இருந்தால் மட்டுமே விவாதத்தைத் தொடரமுடிகிறது என்பது அசைக்கமுடியாத உண்மையாகிறது என்பதற்குச் சான்றுகளே இந்த உரையாடல்களும் அப்படியே போகிறபோக்கில், அன்பாத்திரம் என்ற கலைச்சொல்லைக் கட்டமைத்திருக்கிறார்கள் பாருங்கள். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தம் பழைய உணர்வுகளுக்குச் சம கால அரசியலோடு தொடர்புப்படுத்தும் சொற்களை நம்மால் கட்டமைக்க முடிவது பெண்ணிய சிந்தனையாளர்களின் தனித்த திறமையல்லாமல் வேறென்ன. உண்மையில், இந்த நூல் தன்னளவில் ஓர் இனவரைவியல் நூலாகிறது.

-குட்டி ரேவதி

You may also like