விண்வெளித் தழும்புகள்
ஆசிரியர் : அருண் ராம் , நம்பி நாராயணன்
தமிழில் : ஜே.வி.நாதன்
Publisher:புஸ்தகா
முனைவர் இறையன்பு
நேர்மையாகவும், கறாராகவும், கடினமாகவும் உழைத்த மனிதனின் வாழ்வில் எதிர்பாராத சிக்கலும், அவப்பெயரும், அவமானமும் நேர்கிறபோது தோன்றும் உள்ள உணர்வுகளையும். அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து போராடி வெற்றிபெற்று அப்பழுக்கற்ற தன் தூய்மையை நிலைநாட்டிய உள்ள உறுதியையும் சுயசரிதைக் குறிப்பாகக் கொண்டுள்ளது விண்வெளித் தழும்புகள்' என்னும் இந்த நூல். அடுத்தது என்ன என்று ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திரில் நாவலைப்போல திடுக்கிடும் திருப்பங்களோடு திகழும் இந்த நூலை நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் அடுத்தடுத்து ஒப்விட்டு அற்புதமாக எழுதியிருக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணின் நடை சிறிதும் பிசகாமல் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் வாசிக்கும்போதே வழுக்கிக்கொண்டு செல்லும் அளவு நேர்த்தியாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ஜே.வி. நாதன்.
சிவசங்கரி
தொடர்ந்து ஒரு அலறல் சப்தம். இதுவரை எப்போதும் அப்படி ஒரு அலறல் ஒலியை எங்குமே கேட்டதில்ல. அஞ்சில் அமர்ந்தேன். அவர் தலையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன்... தலையை கோதி விட்டோட அவர் பெயரை மென்மையாக உச்சரித்தேன் மீனா அமைதியானார்... அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீ என் தொடையை நனைத்ததை உணர்ந்தேன்.. இந்த வரிகளை படிக்கும் போது எவருக்குமே கண்களில் நீர் துளிர்க்கும்.. உறுதிபாய் ! 28 ஆண்டுகள் இவர் அனுபவித்த சத்திய சோதனை இவர் குடும்பத்தை, மனைவி மகள் மகன் சகோத்திகள் என்று அனைவரையுமே.அ நெஞ்சு வரை சென்று காயப்படுத்தி உள்ளது.. ஒரு ஞானியை போல துன்பம் இன்பம் எது வந்தாலும் அடிப்பட்டோ, துவண்டோ போகாமல் தான் செய்ய வேண்டியதை மன தைரியத்துடன், தெளிவுடன் செய்து தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து கொண்டிருப்பவர் திரு. நம்பி நாராயணனி
மாலன்
வல்லரசுகளுக்குமிடையே, இந்தியாவிற்கும் உலக நெடுங்காலமாக ஒரு அந்தக் கயிறு இழுக்கும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. நம் தலைமுறையில் நாம் கண்ணெதிரே கண்ட ஒரு சதி விண்வெளிப் போட்டியில் நம்மை வீழ்த்த நடந்த சதி. ஒவ்வொரு முறையும் இது போன்ற சதிகளில் நம்நாடு பிழைத்துக் கொள்கிறது. ஆனால் எளிய மனிதர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குடும்பம் அல்லாடுகிறது. அவர்கள் நேர்மையான உழைப்பினால் நெடுநாள்களாகக் கட்டிக் காத்த நற்பெயர் நாசமாகிறது. இது அப்படிப்பட்ட ஒரு சதியையும் அந்தச் சதியைத் தன் மன உறுதியினாலும் கடுமையான போராட்டத்தினாலும் முறியடித்த விஞ்ஞானி பத்மபூஷன் நம்பி நாராயணனின் வாழ்க்கையையும் விவரிக்கும் நூல் இது படிப்பவர்கள் மனம் கரையும் பின வீறு கொண்டு எழும், வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளும்.