இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்... என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்... என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா? தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது! எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
No product review yet. Be the first to review this product.