வாழ்க்கையில் நிம்மதியை அடையவிடாமல் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தடை டென்ஷன். மகிழ்ச்சியை முழுமையாக நம்மை அனுபவிக்க விடாமல் செய்வதும் இந்த டென்ஷன்தான். டென்ஷனிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாமல் அதை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகிறோம். டென்ஷனால் ரத்த அழுத்தம் முதல் மாரடைப்பு வரை பல பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அன்றாட வாழ்விலிருந்து டென்ஷனை எப்படி விலக்கி வைப்பது என்பதை எளிமையாகச் சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
டென்ஷனை விளக்கும் சின்னஞ்சிறு கதைகளையும், டென்ஷனைக் குறைப்பதற்குத் தேவையான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் இப்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் சாது ஸ்ரீராம்.
டென்ஷன் இல்லாத வாழ்க்கை, மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. அப்படி ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது இந்த நூல்.
No product review yet. Be the first to review this product.