1907இல் முதன்முதலாக வெளியான இந்த நாவல் உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையைக் கதைக் களமாகவும் கொண்ட நாவல். இந்த நாவல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது; தமிழில் தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்த்துள்ளார்.
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.
No product review yet. Be the first to review this product.