ஆணி அடிக்கவேண்டும் என்றால் சுத்தியல் வேண்டும். அது கையில் இல்லாவிட்டாலும் சிரமப்பட்டு ஆணி அடித்துவிடலாம். ஆனால் மிகவும் நேரமாகும், ஆணி சரியாக இறங்காமல் போகலாம், கையில் அடி விழலாம்... இந்தப் பிரச்சனைகளையெல்லாம் ஓர் எளிய சுத்தியல் சரிசெய்துவிடுகிறது, நம் வெற்றியை உறுதிப்படுத்திவிடுகிறது. சுத்தியல் மட்டுமில்லை, அதுபோல் இன்னும் பல கருவிகள், வெவ்வேறு செயல்களை எளிமையாக்குகின்றன, நமக்குப் பெரிய அளவில் உதவுகின்றன. சரியான கருவிகளைக் கைவசம் வைத்திருப்பவர்கள் மற்றவர்களைவிட நன்கு வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள். வேலைகளை எளிமையாக்கும் கருவிகளைப்போல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் படிப்பு, பணி, உறவுகள், பிறருடன் பழகுவது, அழுத்தமின்றி வாழ்வது என்று பல்வேறு விஷயங்களைச் செழுமையாக்கக்கூடிய பல அழகான, எளிதான, பயனுள்ள நுட்பங்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. 'ராணி' வார இதழில் தொடராக வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களுடைய பாராட்டைப் பெற்ற தொடர், இப்போது நூல் வடிவில். படியுங்கள், சரியான நேரத்தில் சரியான நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் வெற்றியை உறுதிப்படுத்துங்கள்.
No product review yet. Be the first to review this product.