வெற்றியின் சூட்சுமம் தகவல் பரிமாற்றங்களில் அடங்கியுள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது செல்ஃபோன், SMS, ஈ-மெயிலோடு முடிந்து போகும் சமாசாரம் அல்ல. வார்த்தை கள் நம் வாழ்வோடு நேரடியாகத் தொடர்புள்ளவை; நம் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவை. அதனால்தான் நிர்வாகவியல் வகுப்புகளில் கம்யூனிகேஷனை ஒரு முக்கியப் பாடமாகப் போதிக்கிறார்கள். பிறருக்கு ஆர்வம் ஏற்படும்படி பேசுவது எப்படி? தர்மசங்கடமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது? மேடையில் எப்படிப் பேசுவது? குடும்பத்தினரிடம்? மேலாளரி டம்? தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? அவற்றை எப்படிக்களைவது? அத்தனைக் கேள்விகளுக்கும் இந்நூலில் விடை உண்டு. எந்த நேரத்தில் எதை எப்படிப் பேச வேண்டும் என்பதை சுவாரசியமாகக் கற்றுக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
No product review yet. Be the first to review this product.