ஏயெம் எழுதிய, ‘அதே அதே அந்த நடனம்’ நாடகத்தைப் படித்து முடித்ததும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர் ஸாம்யுவல் பெக்கட் நினைவுக்கு வந்தார். அபத்த நாடகத்தின் பிதாமகர் அவர். அதே பாணியில் இந்நாடகத்தை ஏயெம் எழுதியிருக்கிறார்.
அதிகாரவர்கத்தின் ஆணவம். Boss இதன் குறியீடு. உலகம் தனக்காகத்தான் இயங்குகிறது என்ற அகம்பாவம்.
ஸாம்யுவல் பெக்கட்டின் நாடகங்களைப் படிப்பதைக் காட்டிலும் மேடையேற்றிப் பார்ப்பதுதான் சுகாநுபவம் என்பார்கள்
.
நான் படிக்கும்போதே மனத்திரையில் இந்த ’அதே அதே அந்த நடனம்’ நாடகத்தைப் பார்த்தேன். அதுவே இவ்வெழுத்துப் பிரதியின் வெற்றி.
‘அதே அதே அந்த நடனம்‘ ஓர் அருமையான மேடை நாடகமாகவும் படிக்க சுவாரஸ்யாகவும் இருக்கிறது.
- இந்திரா பார்த்தசாரதி
No product review yet. Be the first to review this product.